Saturday, June 23, 2012

சென்னையில் ரூ.109 கோடியில் மேம்பாலம்

சென்னையில் ரூ.109 கோடியில் மேம்பாலம், சுரங்க, நடை பாதைகள்: முதல்வர்
பதிவு செய்த நாள் : தினமலர் - ஜூன் 22,2012,23:28 IST
"சென்னை: தமிழகம், தற்போது சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த வகையில், புதிய சாலைகள், புதிய ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கவும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரிக்கவும், 3,793 கோடி ரூபாய் கடந்தாண்டு ஒதுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சென்னையில், 40 கோடி ரூபாய் செலவில் கோயம்பேடு அருகில் மேம்பாலம், எட்டு இடங்களில், 30 கோடி ரூபாய் செலவில், மேம்பாலங்கள், 19 கோடி ரூபாயில், சுரங்க நடைபாதைகள், 20 கோடி ரூபாயில், ஆகாய மேம்பாலங்கள் என 109 கோடி ரூபாயில், திட்டங்களை செயல்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்."

அது சரி. எல்லாப் பணத்தையும் கட்டுமானப் பணிகளுக்கே கொடுப்பது எப்படி நியாயம். கான்டிராக்ட்  கட்சிக்காரர்களுக்கே! அதில் நடக்கும் ஊழல், அதனால் கிடைக்கும் லாபம் கட்சிக்காரர்களுக்கே!
இதில் ஒரு பங்கு மின்சார வாரியத்தின் நஷ்டத்தை ஈடு செய்யக் கொடுத்திருந்தால், மின் கட்டணம் உயர்ந்திருக்காதே!

Saturday, June 16, 2012

Trade Secret

பங்குவர்த்தகம் சரிவு:10000 பே‌ரை வீட்டிற்கு அனுப்பியது நோக்கியா!

 "இந்திய மொபைல் சந்தையில் நோக்கியா நிறுவனம் பல ஆண்டுகளாக முன்னனயில் இருந்து வருந்தது. ஆனால், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொபைல் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக நோக்கியா உலக அளவில் தனது 10,000 தொழிலாளிகளை வீட்டிற்கு அனுப்பி இருக்கிறது. மேலும் இரண்டாவது காலாண்டில் ஏற்படும் வர்த்தக இழப்பு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று கருதுகிறது.நோக்கியா தனது நிறுவனத்தை புதுப்பிப்பதற்காக வரும் 2013க்குள் 1 பில்லியன் ஈரோவை செலவழிக்க இருக்கிறது. அதோடு நோக்கியாவின் பங்கு வர்த்தகமும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனபது தற்போதைய நிலையாகும்."

இதே நிலமையில் இருந்த மின்வாரியத்துக்கு உயிர் கொடுக்கிறேன் என்று தமிழக அரசு மின் வாரியக் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தியது சரியா? இந்த வியாபார நுணுக்கம் தமிழக அரசுக்கு ஏன் உதிக்கவில்லை?

ராமா! ராமா! ஓய்வூதியம் 10,000 வாங்குபவரை 3,500/- மின் கட்டணம் கட்டச் சொவது என்ன நியாயம். நீயே கேளப்பா, ராமா.

Wednesday, April 14, 2010

ஞானவெட்டியானின் ஆதங்கம்

பிரபுலிங்க லீலை – 2.49 to 2.61

Comments

Comment from நாகன் | Edit comment
Time: April 14, 2010, 3:33 pm

இப்படி ஒரே கொத்தாகக் கொடுக்காமல் ஒண்ணு ஒண்ணா கொடுத்தால் நல்லா இருக்குமே!

Comment from ஞானவெட்டியான் | Edit comment
Time: April 14, 2010, 3:40 pm

அன்பு நாகன்,
காலம் குறைவாக உள்ளது. காலன் நெருங்குகிறான். அதற்குள் தொட்டதை எல்லாம் முடிக்கவேண்டுமே என்னும் பதைபதைப்பு. அத்துடன் “தமிழ்மணம்” போல் இலகுவான பட்டைகள், உலவு, போகி, தமிழிஷ், தமிழ்10 ஆகியவைகளில் இல்லை. ஆகவே இடுகைகளைப் பகிர்வதற்கு நிறைய நேரம் செலவிடவேண்டி உள்ளது. ஆகையால்தான் இந்த ஏற்பாடு. முடிக்க முடிக்க கொட்டிவிட்டால் என் வேலை முடிந்தது. படித்தால் படிக்கட்டும். இல்லையெனில் இழப்பு எனக்கில்லை.

Sunday, January 29, 2006

7. அருவாயும் உருவாயும் அந்தி யாயும்

7. அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமுமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!

அரு = உருவமற்றும்
உரு = உருவமுடையதாயும்
அந்தி = முடிவு
அந்தம் = இருள்
திரு = மேன்மை, செல்வம்
குரு = இருளைப் போக்குபவன்
செறிந்த = கலந்து, பொருந்தி மிகுந்த

Friday, January 20, 2006

6.சோதி மயமான பரிசுத்த வத்துவை

6.சோதி மயமான பரிசுத்த வத்துவை
*************************************

சோதி மயமான பரிசுத்த வத்துவை
தொழுதழு தலற்றித் தொந்தோம் தோமெனவே
நீதிதவறா வழியில் நின்று நிலையாய்
நினைந்து நினைந்துருகி ஆடு பாம்பே!

பரிசுத்த - தூய்மையான, புனிதமான, முழுமையான
வத்து - பொருள்
அலற்றுதல் - அலறல். கதறல், கூப்பிடல், ஒலித்தல், விரிதல் என்னும் பல பொருள் இருந்தாலும், இங்கே விரிதல் என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது, தொழுதழு தலற்றி = தொழுது, அழுது, அலற்றி(விரிதல்).
தொழுது, அழுது, பின் தன் படத்தை விரித்து என்று பொருள்.
தொந்தோம் தோமெனவே = தொந் தோம் தோம் என்னும் தாளத்துக்கு ஏற்ப
நீதி = நியாயம், முறைமை, மெய் என்னும் பல பொருள் இருந்தாலும், இங்கே மெய்(உடலுக்குள்ளே) க்குள் வழிதவறாமல் நிலையாய நினைந்து நினைந்து உருகி ஆடு பாம்பே என்றார்.