Friday, January 20, 2006

6.சோதி மயமான பரிசுத்த வத்துவை

6.சோதி மயமான பரிசுத்த வத்துவை
*************************************

சோதி மயமான பரிசுத்த வத்துவை
தொழுதழு தலற்றித் தொந்தோம் தோமெனவே
நீதிதவறா வழியில் நின்று நிலையாய்
நினைந்து நினைந்துருகி ஆடு பாம்பே!

பரிசுத்த - தூய்மையான, புனிதமான, முழுமையான
வத்து - பொருள்
அலற்றுதல் - அலறல். கதறல், கூப்பிடல், ஒலித்தல், விரிதல் என்னும் பல பொருள் இருந்தாலும், இங்கே விரிதல் என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது, தொழுதழு தலற்றி = தொழுது, அழுது, அலற்றி(விரிதல்).
தொழுது, அழுது, பின் தன் படத்தை விரித்து என்று பொருள்.
தொந்தோம் தோமெனவே = தொந் தோம் தோம் என்னும் தாளத்துக்கு ஏற்ப
நீதி = நியாயம், முறைமை, மெய் என்னும் பல பொருள் இருந்தாலும், இங்கே மெய்(உடலுக்குள்ளே) க்குள் வழிதவறாமல் நிலையாய நினைந்து நினைந்து உருகி ஆடு பாம்பே என்றார்.

4 comments:

குமரன் (Kumaran) said...

பாம்பாட்டிச் சித்தர் பாடல்களை பொருளுடன் வலையில் ஏற்றுகிறீர்கள். மிக்க நன்றி.

இந்தப் பாடலை நான் நிறைய முறை கேட்டிருக்கிறேன். பாம்பாட்டிச் சித்தரின் பாடல்களில் இது கொஞ்சம் பிரபலம் போலும்.

நாகன் said...

அன்புள்ள குமரன்,
ஆமாம்.
நன்றி.

குமரன் (Kumaran) said...

நாகன் ஐயா. அடியேன் வலைப்பக்கங்களுக்கும் வருகை தந்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

நாகன் said...

வருகிறேன், அய்யா!