2.நீடுபதம் நமக்கென் றுஞ்சொந்தம்
************************************
நீடுபதம் நமக்கென் றுஞ்சொந்தம் என்றே
நித்தியமென் றேபெரிய முத்தி யென்றே
பாடுபடும் போதும் ஆதிபாதம் நினைந்தே
பன்னிப்பன்னிப் பரவி நின்றாடு பாம்பே!
நீடு - நெடுங்காலத்துக்கும் இருத்தல், செழித்தல், நிலைத்திருத்தல்.
நித்தியம் - அழியாமை, மோட்சம்.
ஆதி - எல்லாத்துக்கும் முதலானது, விந்து
பாதம் - கால்பாதம், கண்.
பன்னி - குருவின் ஏவுதலால், குருவை நினைந்து
பரவி - துதித்து, விரிந்து, வணங்கி்.
No comments:
Post a Comment