Monday, January 16, 2006

3.பொன்னில் ஒளிபோலவெங்கும்

3.பொன்னில் ஒளிபோலவெங்கும்
***********************************

பொன்னில் ஒளிபோலவெங்கும் பூரணமதாய்ப்
பூவின்மணம் போலத் தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பலவுயிர்களில் மன்னிப் பொருந்தும்
வள்ளலடி வணங்கி நின்று ஆடுபாம்பே!

பூரணம் - நிறைவு, முழுமை, பொலிவு
பொற்பு - மிகுதி, பொலிவு, அழகு
மன்னும் - சேரும்
மன்னிப் பொருந்தும் - நிலைபெற்றுப் பொருந்தியிருக்கும்
வள்ளலடி - வள்ளலாம் இறைவனடி.

No comments: