Monday, January 16, 2006

1. தெளிந்து தெளிந்து தெளிந்து

1. தெளிந்து தெளிந்து தெளிந்து
*******************************

தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே! சிவன்
சீர்பாதங்கண்டு தெளிந்து ஆடுபாம்பே!
ஆடுபாம்பே! தெளிந்து ஆடுபாம்பே! சிவன்
அடியிணை கண்டோமென்று ஆடுபாம்பே!

சீர்பாதங்கண்டு என்பதை சீர்பதங்கண்டு என்றும் சொல்லுவது உண்டு. இந்தப்பாடல் மிகவும் எளிமையாய் இருப்பதால் விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

சீர் - அழகு, ஒலி, இரைச்சல், ஒழுங்கு,சிறப்பு, செல்வம், புகழ், பொன், வாழ்வு இன்னும் பல பொருட்கள் இருக்கின்றன.

இணை - கூந்தல், துணை
அடியிணை - திருவடியையும், கூந்தலாம் திருமுடியையும்

No comments: