Saturday, January 14, 2006

பாம்பாட்டி சித்தர் - வரலாறு

பாம்பாட்டி சித்தர்
******************

வாலிப வயதில் இவர் காட்டில் சென்று பாம்புகளைப் பிடித்து, அவைகளை நகரில் பாம்பாட்டிகளுக்கு விற்றும், தானே பாம்புகளை மகுடி ஊதி ஆட்டியும் பிழைப்பு நடத்தி வந்தார். ஒரு நாள், நாகமணி உடைய பாம்பு ஒன்றைப் பிடிக்க அலைந்து முயன்று கொண்டு இருக்கையில் சட்டைமுனி சித்தரைச் சந்தித்தார்.
ஏனப்பா! நல்ல பிராணிகளான பாம்புகளை வதைக்கிறாய்? உன் உடலுக்குள் இருக்கும் பாம்பை உனக்கு அடக்கத் தெரியுமா? எனக் கேட்டார். உடனே அவரைச் சரண் அடைந்து,"எனக்குத் தெரியாது. சொல்லிக் கொடுங்கள்" என்றார்.

சட்டை முனியும் சோதனைகள் பலவும் செய்து, இவன் தகுதியானவனே என முடிவு செய்தார். பின்னர் அவனுக்கு அறிவு புகட்டினார். அவனுக்குத் தீக்ஷயும் கொடுத்தார். அதன் பின் பாம்பாட்டி, தவங்கள் பல செய்து பாம்பாட்டி சித்தர் ஆனார்.

இவர் பாண்டி நாட்டில் வசித்தர் எனப் பலர் சொல்லுவார்கள். இல்லை, இல்லை, இவர் கொங்கு நாட்டு மருதமலையில் தவம் செய்து கொண்டிருந்தார் என்று கதைகள் சொல்லுவார்கள் பலர்.

இவரின் ஞானப் பாடல்களில், பாம்பு என்பது குண்டலினி சக்திதான்.

No comments: