Wednesday, January 18, 2006

4. எள்ளில் எண்ணைபோல உயிரெங்கும்

4. எள்ளில் எண்ணைபோல உயிரெங்கும் நிறைந்த
ஈசன்பத வாசமலர் எண்ணி யெண்ணியே
உள்ளபடி அன்புபக்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கி யடங்கித் தெளிந்து ஆடுபாம்பே!

ஈசன்பத - இறைவனின் திருவடி
ஒடுங்கி - அடங்கி, சுருங்கி, பதுங்கி, வழிபட்டு, முடிவு எடுத்து
அடங்கி - "அடக்கம் அமரருள் வைக்கும்" என்னும் பழ்மொழிக்கு இணங்க ஐம்பொறிகளையும் அடக்கி
தெளிந்து - அறிந்து, ஆராய்ந்து

1 comment:

ஞானவெட்டியான் said...

அன்பு நாகன்,

எளிமையாய்த் தந்துள்ளீர்.

ஒடுங்கி - வழிபட்டு
(ஒடுங்கி என்பதற்கு அடங்கி, சுருங்கி, பதுங்கி, எனப் பல பொருள்கள் இருப்பினும் வழிபட்டு எனும் பொருளே பொருத்தம்.)

// "அடக்கம் அமரருள் வைக்கும்"//
இங்கு அடக்கம் என்பது புலனடக்கம். அதுவும் நாவடக்கம். அதற்காகத்தான் திருவள்ளுவர் தனி அதிகாரமே இயற்றியுள்ளார்.

நாவடக்கம் என்பதிலும் சுவையடக்கத்தை விட பேச்சடக்கம்தான் முக்கியம். மவுனம். மோனமென்பது ஞான வரம்பு.