Wednesday, January 18, 2006

5. அண்டபிண்டம் தந்த எங்கள் ஆதிதேவனை

5. அண்டபிண்டம் தந்த எங்கள் ஆதிதேவனை
***********************************************

அண்டபிண்டம் தந்த எங்கள் ஆதிதேவனை
அகலாம லேநினந்தே அன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி ஆடு பாம்பே!

அகலாம லேநினந்தே - நினைப்பில் அகலாமல்(நீங்காமல்)
ஏத்தி - துதித்து
ஏகமன மாக - ஒரே மனமாக, அசைவற்ற மனமாக
நாடி - நாடுவது

1 comment:

ஞானவெட்டியான் said...

அன்பு நாகன்,

நாடி என்பதற்கு, தாது, பூவின் தாள், ஆண்முடி, 24நிமிடங்கொண்ட கால அளவு, உள்துளை, தாடி, இலையின் நரம்பு, நரம்பு, மூக்கு, நாழிகை, யாழின் நரம்பு எனப் பல பொருட்கள் உள்ளன.

அதில்,"ஏகமன மாகநாடி" என்பதற்கு, அசைவற்ற மனத்தின் உள்துளையில் நின்றாடு பாம்பே எனக் கூறல் சிறப்புடைத்து.